பெரிய நத்தம் நூலகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்: பொதுமக்கள் அதிருப்தி

பெரிய நத்தம் நூலகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்: பொதுமக்கள் அதிருப்தி
X

பெரியநத்தம் கிராம ஊராட்சியில் நூலகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்.

புதிய ‌‌அங்கன்வாடி மையம் கட்ட திட்டமிடப்பட்டநிலையில் பணிகள் துவங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம் , பெரிய நத்தம். கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் அங்குள்ள ஆரம்ப பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது.

இந்நிலையில் அங்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அச்சம் காரணமாக புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. அதுவரை அருகிலுள்ள ஊராட்சி நூலகத்தில் செயல்படும் தெரிவித்தது.மேலும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் அங்கு நடைபெறுகிறது. இவ்வளாகம்‌ முன்பு திறந்த நிலையில் மழை நீர் கால்வாய் திறந்த வெளியில் உள்ளதும் , படிகள் அனைத்தும் சேதமடைந்து பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதியும் , கிராம நூலகத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!