தேர்தலில் வெற்றி பெற வேண்டி கோ தானம் செய்த அமமுக வேட்பாளர்

தேர்தலில் வெற்றி பெற வேண்டி கோ தானம் செய்த அமமுக வேட்பாளர்
X
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தேர்தலில் வெற்றிபெற வேண்டி கோ தானம் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உத்தரமேரூர் தொகுதியில் அமமுக சார்பில் ஆர்.வி.ரஞ்சித்குமார் போட்டியிட்டார்.

தேர்தலில் தொகுதி மட்டுமில்லாமல் கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தான் வெற்றி பெற்றால் உறுதியாக செய்வேன் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின் தான் வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பூசிவாக்கம் மேட்டு காலணியை சேர்ந்த பார்வையற்ற சிவக்குமார் என்பவருக்கு கோ-தானம் வழங்கினார்.

அதன்பின் முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்தில் கலந்து கொண்டார்.

Tags

Next Story
ai future project