காஞ்சிபுரம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் ஆலோசனை

காஞ்சிபுரம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் அனல்  பறக்கும் ஆலோசனை
X

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக & காங்கிரஸ் கட்சிகள் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனல் பறக்கும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும் செப்- 15க்குள் நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசும் இணைந்து செயல்பட்ட தொடங்கியுள்ளது. மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இதற்கான வேலைகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி அமைப்பின் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் வாக்குகள் சேகரிப்பு குறித்து ஆலோசனை கூட்டங்களை அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளுடன் நடத்தி வருகிறது.

இன்று உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் தலைமையில், வேடல் கிராமத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் குமணன் முன்னிலை வகித்தார்..

இதேபோல் தமிழக காங்கிரஸ் காஞ்சி மாவட்ட சார்பில் அதன் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அதன் நிர்வாக உறுப்பினர்களுடன் வாரணவாசியில் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரதிநிதியாக கலந்து ஆலோசனை கூட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னேரே காஞ்சிபுரம் கலைக்கட்ட துவங்கியுள்ளது.

Tags

Next Story