பணம் பட்டுவாடா ? அதிமுகவினர் மீது வழக்கு
உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 3 இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக 71ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதில் ஆங்காங்கே பணம் மொத்தமாக பிடிபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருவதாக மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தகவல் வந்தது. புகாரின் அடிப்படையில் 3 இடங்களில் பறக்கும்படை குழுவினரால் பணம் பிடிக்கப்பட்டது.
இதில் மாகறல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருவிமலையில் ரூ46210 பணம் பறிமுதல் செய்யப்பட்டு மோகன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .மேலும் குன்னவாக்கம் கிராமம் ஓரகடம் காவல்நிலைய பகுதியில் ரூ. 5000 கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு ராமதாஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சித்தனக்காவூர் சாலவாக்கம் காவல்நிலைய பகுதியில் ரூ. 20 ஆயிரம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு வேங்கப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவர்கள் அனைவரும் அதிமுக வினர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu