20ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த கைகள்

20ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  இணைந்த கைகள்
X
20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக - பாமக கூட்டணி இணைந்துள்ளதால் கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என வேட்பாளர் கருத்து.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி உடன்பாட்டால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணிசமான இடங்களை அதிமுக தக்கவைத்துக்கொள்ளும் என கருத்து நிலவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை முதலியார், வன்னியர், ஆதி திராவிடர் என மூன்று சமூகத்தினரும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். பெரும்பாலும் காஞ்சிபுர சட்டமன்ற வேட்பாளராக முதலியார் அல்லது வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் வேட்பாளராக அறிவிக்கப்படுவர்.

அதேபோல் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை வன்னிய சமூகத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தினால் அரசியல் கட்சிகளின் வெற்றியை எளிதாக்கும் என்பது தொகுதியை பொறுத்தவரையிலான கருத்து. இதுமட்டுமல்லாமல் முதலியார் மற்றும் வன்னியர் சமுதாய ஓட்டுகள் இணைந்தால் கூடுதல் பலம் என்பதால் தற்போது உள்ள அதிமுக, பாமக கூட்டணி, தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கடும் சவாலாகவே அமையும் என்பதும் கூர்ந்து பார்க்க வேண்டிய விஷயம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூட்டணி வேட்பாளர் சோமசுந்தரம் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுந்தரை எதிர்த்து இத்தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது இதே கூட்டணிகள் தான் களத்தில் இருந்தது என்பது கூடுதல் தகவல்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!