சின்னம் ஒதுக்கியதில் முறைகேடு: தேர்தல் அலுவலரை சிறை பிடித்ததால் பரபரப்பு

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்தல் அலுவலர் அறையை முற்றுகையிட்டு அலுவலக அறையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 என இரு கட்டங்களில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அதனைத் தொடர்ந்து பரிசோதனை மற்றும் வாபஸ் என பல முறைகளை கடந்து இன்று மாலை 3 மணி முதல் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழ்பேரமல்லூர் கிராம ஊராட்சி. இங்கு 751 ஒரு ஆண் வாக்காளர்களும், 756 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 1508 வாக்காளர்கள் உள்ளனர்.
கிராம ஊராட்சி 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு 15க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று சின்னம் ஒதுக்கும் பணியின்போது உதவி தேர்தல் அலுவலராக அங்கம்பாக்கம் பள்ளி தலைமையாசிரியர் பணியாற்றியுள்ளார்.
வாபஸ் நேரம் முடிந்தபின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கிய போது அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சாவி சின்னம், திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சீப்பு சின்னம் என அனைவருக்கும் அளித்துள்ளார்.
வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மட்டுமே சின்னம் வழங்க வேண்டிய நிலையில் திமுக சார்பாக போட்டியிட்ட ஆறு பேருக்கும் ஒரே சின்னம் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்தல் அலுவலர் அறையை முற்றுகையிட்டு அலுவலக அறையை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாகரல் காவல்நிலையத்திற்கு தகவல் வந்ததன் பேரில் அங்கு சென்று அலுவலரை மீட்டு இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
திமுக நபரின் பேச்சைக் கேட்டு இது போன்ற செயலில் ஈடுபட்டதாக அலுவலர் மீது குற்றசாட்டு எழுந்ததும் அலுவலரை சிறை பிடிப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu