மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
X

 மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தபோது எம்எல்ஏ சுந்தருக்கு மலர்மாலை அணிவித்தனர்.

அஞ்சூர் பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 100 பேர், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிறப்பான திட்டங்கள் குறைந்த காலத்தில் நடைமுறை கொண்டு வரப்பட்டதும் , புதிய அறிவிப்புகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில் பல்வேறு கட்சிகளிலிருந்து மூத்த உறுப்பினர்களிலிருந்து கடைசி தொண்டன் வரை பல்வேறு நபர்கள் நாள்தோறும் தமிழகம் முழுவதும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி 42 ஆவது வட்டம் அஞ்சூர் பகுதியில் காண்டீபன் என்பவர் தலைமையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் திமுகவில் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் முன்னிலையில் இணைந்தனர்.

இணைந்த உறுப்பினர்களை வரவேற்று சேலை, வேட்டிகள் வழங்கி வரவேற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , நகரசெயலாளர்‌ சன்பிராண்ட் ஆறுமுகம் , சந்துரு ஒன்றிய செயலாளர் குமார் , தேனம்பாக்கம் சங்கர் , மலர்மன்னன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!