கிணறு தூர் வாரியபோது 4 அடி உயர சிலை கண்டெடுப்பு
கிணறு தூர் வாரிய போது கண்டெடுக்கப்பட்ட 4 அடி உயர அம்மன் சிலை வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியாம்பூண்டி ஊராட்சி எம்ஜிஆர் நகர் அருகே ஏரிக்கரையில் பழைமையான பஞ்சாயத்து பொது கிணறு உள்ளது. தற்போது இந்த கிணறு குடிநீர் தேவைக்காக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் கிணறு தோண்டும் தொழிலாளர்கள் தூர்வாரிக்கொண்டு இருந்தபோது 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட கலைநயத்துடன் கூடிய அழகிய புதிய அம்மன் சிலை மற்றும் 1/2 அடி பீடம் இருந்ததை கண்டு கிணற்றில் இருந்து சிலையை வெளியே எடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு சென்ற உத்திரமேரூர் வட்டாட்சியர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் மீனாட்சி, கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், கிராம நிர்வாக உதவி அலுவலர் மீனா ஆகியோர் அம்மன் சிலை மற்றும் பீடத்தை மீட்டு மினி வேன் வாகனத்தில் ஏற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும், கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை புதிதாக உள்ளதால் புதிய கோவில் அமைப்பதற்காக கிராமத்தினர் யாராவது சிலையை கிணற்றில் வைத்தனரா அல்லது வெளி நபர்கள் சிலையை கொண்டு வந்து கிணற்றில் போட்டு விட்டு சென்றானரா என்ற கோணத்தில் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
சிலை கிடைத்த விவரம் அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததை அடுத்து சிலையினை சுத்தம்செய்து, பூஜைகள் மேற்கொண்டு, மஞ்சள் , குங்குமம் மற்றும் புடவை சாத்தி வழியனுப்பி வைத்தார்.
சிலை கண்டெடுக்கப்பட்ட செய்தியால் ப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu