5ம் ஆண்டு சித்தர் தின விழா : எம்எல்ஏ க.சுந்தர் பங்கேற்பு

5ம் ஆண்டு  சித்தர் தின விழா  : எம்எல்ஏ க.சுந்தர் பங்கேற்பு
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சித்தர் தின விழா

மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5ம் ஆண்டு சித்தர் தின விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5ஆம் ஆண்டு சித்தர் தின விழா நடைபெற்றது/ இந்த விழாவில் சிறப்பு ஆழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் கலந்து கொண்டார்.

அகத்தியர் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட்ட கோலங்களை பார்வையிட்ட பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகங்கள்,சிறுவர், சிறுமியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் பெட்டகங்களையும் வழங்கினார்.

பின்னர், சித்த மருத்துவ தொடர்பாக பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் குமார்,ஒன்றிய கவுன்சிலர் சுகுனா சுந்தராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் ராதா நடேசன்,தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!