வாலாஜாபாத் : இன்று 45 பேர் மட்டுமே வேட்புமனு பெற்றுள்ளனர்

வாலாஜாபாத் : இன்று 45 பேர் மட்டுமே வேட்புமனு பெற்றுள்ளனர்
X

வேட்புமனு விண்ணப்பங்களை பெறும் வேட்பாளர் 

வாலாஜாபாத் தேர்வுநிலை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் துவங்கிய இன்று 45 நபர்கள் மட்டுமே மனு பெற்றுள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தேர்வு நிலை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 6 ஆயிரத்து 585ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 492 பெண் வாக்காளர்களும், 5 இதர வாக்காளர் என மொத்தம் 14 ஆயிரத்து 082 வாக்காளர்கள் உள்ளன.

மேலும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கிய நிலையில் இன்று வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுவை வெறும் 45 பேர்கள் மட்டுமே வாங்கி சென்றனர்.

மேலும் திமுக மற்றும் அதிமுகவில் இன்னும் பேரூராட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான அரசியல் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாததால் வேட்புமனு பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai healthcare products