காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கிளைகள் சார்பில் ‌கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக கிளைகள் சார்பில் ‌கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது-

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் என அன்பாக அழைக்கபடும் மு.க.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்து கிளைகளில் திமுக கொடியேற்றபட்டு , திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

காஞ்சிபுரம் விளக்கடிகோயில் தெருவில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்வில் மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் SKPசீனுவாசன் , நகர கழக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future