300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்
ஐயங்கார் குளம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் திருக்குளம் புணரமைக்கம் பணியினை துவக்கி வைத்த எம்எல்ஏ க.சுந்தர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்நிலைகள் அனைத்தும் முறையாக தூர் வாரப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் .
அந்த வகையில் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அய்யாங்கார்குளம் கிராமத்தில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது.இந்த சுமார் 300ஆண்டுகள் பழைமையானது. இந்த பழமையான குளமானது கடந்த காலங்களில் முறையாக பராமரிக்கபடாமல் ,பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் அசுத்தமாக உள்ளது. இதனை அறிந்த காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளத்தைத் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று 15வது மாாற்றகுழு பொதுநிதி யின் கீழ் சுமார் 23.25 லட்சம் மதிப்பில் கைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான குளத்தை தூர்வாருவதற்கான பணியினை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்த குளத்தை தூர்வாரப்பட்டால் சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயனடைவர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் குமணன்,ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,ஒன்றிய குழு துணை தலைவர் திவயபிரியா இளமது,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu