வாலாஜாபாத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல் : வாகனம் பறிமுதல், 3 பேர் கைது

வாலாஜாபாத்தில்  2 டன்  ரேஷன் அரிசி கடத்தல் : வாகனம் பறிமுதல், 3 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் வாகனம்

வாலாஜாபாத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்ற 3 பேரை கைது செய்து, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி பச்சையம்மன் கோயில் தெருவை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(17) மற்றும் சந்துரு(42) ஆகிய இருவரும் அதே பகுதியை சேர்ந்த டாட்டா ஏஸ் வாகன உரிமையாளர் சுந்தர் என்பவருடன் இணைந்து வாலாஜாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராநகர் , வல்லபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் பெறும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று டாட்டா ஏஸ் வாகனம் மூலம் ஏற்றிக்கொண்டு ஒரகடம் நோக்கி செல்வதாக வாலாஜாபாத் காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரிய வந்தது. அதனை மடக்கி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்த ரேஷன் அரிசி எடை அளவு சுமார் இரண்டு டன் இருக்கும் எனவும் இதுகுறித்து வாலாஜாபாத் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாலாஜாபாத் காவல்துறை சார்பில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story