காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
X

வேட்பு மனு பரிசீலனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்  உடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 31 நபர்கள் வேட்பு மனு செய்த நிலையில், 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசிலீனை இறுதியில் அதிமுக திமுக பாமக உள்ளிட்ட 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

நாம் தமிழரின் முந்தைய சின்னமான விவசாயி சின்னம் வர வேட்பு மனு செய்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலினை நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி துவங்கியது. தேர்தல் அலுவலராக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டு கடந்த ஏழு நாட்களாக வேட்பு மனுக்களை பெற்று வந்தார்.

இறுதியில் நேற்று 31 வேட்பு மனுக்கள் பெற்ற நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனை காண நிகழ்வில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் , திமுக - செல்வம் , பாமக - ஜோதி வெங்கடேசன் , நாம் தமிழர் - சந்தோஷ் குமார் , பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் மற்றும் எட்டு சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பு மனு பரிசீலனையில் கலந்து கொண்ட பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்த விவசாயி சின்னம் தற்போது பெங்களூரை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் வேட்பாளர் பூவரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அதில் முறையாக விவரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அம் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த மனு நிராகரிக்கப்பட்ட போது அந்த வேட்பாளர் பரிசீலனைக்கு வரவில்லை. பரிசீலனை முடிந்த பின்பு வேட்பு மனு பரிசீலனை அறைக்கு தனது தொண்டர்களுடன் வந்த பூவரசன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து அதற்கான காரணத்தை கேட்டு மாவட்ட வருவாய் அலுவலர் , தேர்தல் அலுவலர் என பலரிடம் அலைந்து கொண்டிருந்தார்.

இந்த செயல் ஒருபுறம் வேட்பாளருக்கு வருத்தம் அளித்தாலும், எதிரணியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினருக்கு மகிழ்ச்சி அளித்தது. விவசாயி சின்னம் இடம்பெற்று இருந்தால் வாக்குகள் மாறும் நிலை ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil