உத்திரமேரூர் தொகுதியில் பொது மக்களின் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள்

உத்திரமேரூரில் மிக பழமையான கட்டிடத்தில் இயங்கும் காவல் நிலையம்.
பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் அந்தந்த சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 10 கோரிக்கைகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்க தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.
அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத பல கோரிக்கைகள் உள்ளது. இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு தெரிவித்துள்ளதாக கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளது. அந்த ௧௦ கோரிக்கைகள் பற்றி பார்ப்போமா?
1. உத்திரமேரூர் நூறாண்டுகள் பழமையான கட்டிடத்தில் காவல் நிலையம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. அவற்றிற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டவேண்டும்.
2., உத்திரமேரூர் நகரில் மையத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை நெரிசல் குறைக்க பெரிதும் உதவும் வகையில் அருகில் உள்ள அரசு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
3. அதிகம் தொழிற்சாலை உள்ள ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் என பல பகுதிக்கு அருகாமையில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும்.
4. உத்தரமேரூரில் அரசு கலைக் கல்லூரி அமைத்தல் வேண்டும்
5. கடந்தாண்டு பெய்த கன மழை காரணமாக வாலாஜாபாத் பாலாற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் சென்றதால் முற்றிலும் சேதமடைந்த தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்தினை உறுதிப்படுத்துதல்.
6. உத்திரமேரூர் வட்டத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் மக்கள் நல திட்ட பணிகள் மேற்கொள்ளுதல், வருவாய்துறை பணிகளுக்கு ஏற்றவாராக சாலவாக்கம் புதிய தாலுகாவாக உருவாக்குதல்.
7. பல ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கும் ஒரகடம் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை குறைந்த தூரத்தில் உள்ளதால் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
8.பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னும் செய்யப்படாததால் மத்திய அரசு திட்டத்துடன் இணைந்து குடிநீர் உறுதி செய்தல் வேண்டும்.
இவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த சட்டமன்றத் தொகுதி காஞ்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதாலும், விரைவாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும் இதுகுறித்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்கள் , கட்சி விழாக்கள் அனைத்திலும் இந்த கோரிக்கைகள் பொதுமக்கள் மனு அளிக்கையில், இதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுத்துக் கொண்டு வருவதாகவும் பொது மக்களிடையே தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu