அசத்திய சாலவாக்கம் : தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 1கிலோ தக்காளி பரிசு
சாலவாக்கம் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபருக்கு ஒரு கிலோ தக்காளியை ஊராட்சி தலைவர் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் இருவகையான தடுப்பூசிகளை சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இன்று 11வது தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 7 மணிக்கு துவங்கியது.
இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை 95 சதவீதம் நபர்களும், இரண்டாவது தவணையை 45 சதவீத நபர்களும் செலுத்தி கொண்டுள்ளனர்.
இதுவரை தடுப்பூசியை சேர்த்துக் கொள்ளாத ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 014 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சாலவாக்கம் கிராம ஊராட்சியில் இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஒரு கிலோ தக்காளியினை ஊராட்சி மன்ற தலைவர் பரிசாக வழங்கினார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu