மூதாட்டி கழுத்தை நெறித்து 5சவரன் நகை பறிப்பு

மூதாட்டி கழுத்தை நெறித்து 5சவரன் நகை பறிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மூதாட்டியின் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தோண்டங்குளம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் .இவரது மனைவி பேபிஅம்மாள்(80). இவருக்கு 5 பெண்கள், 1 மகன் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில் பேபியம்மாள் வீட்டில் வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று உள்ளனர். இன்று நள்ளிரவு 2 மணி அளவில் இவர்கள் வீட்டில் அத்துமீறி மர்ம நபர்கள் 2 பேர் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்துள்ளனர்.

வீட்டில் அனைவரும் அசந்து தூங்கிய நிலையில் பேபிஅம்மாள் படுத்திருந்த அறைக்கு சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தை இறுக்கி பிடித்து கொண்டு அவர் அணிந்திருந்த சுமார் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!