காஞ்சிபுரத்துடன் 3 காவல்நிலையங்கள் இணைப்பு

காஞ்சிபுரத்துடன் 3 காவல்நிலையங்கள் இணைப்பு
X

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பில் மூன்று காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்த போது உத்திரமேரூர், பெருநகர் மற்றும் சாலவாக்கம் காவல் நிலையங்கள் மதுராந்தகம் காவல் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என இரண்டு மாவட்டமாக பிரிந்த நிலையிலும் இந்த மூன்று காவல் நிலையங்களும் பழைய நிலையிலேயே மதுராந்தகம் காவல் உட் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.

இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் இரு மாவட்ட காவல்துறையினர் இடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மாற்றியமைக்க மாவட்ட எஸ்பி., இம்மூன்று காவல் நிலையங்களையும் காஞ்சிபுரம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க அனுமதிக்கும் படி காவல்துறை தலைவருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.அதனடிப்படையில் இந்த மூன்று காவல் நிலையங்களும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கோட்டத்தின் கீழ் செயல்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி., இதை கண்காணிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்