கல்குவாரி விபத்து -3 பேர் மீது வழக்குப்பதிவு

கல்குவாரி விபத்து -3 பேர் மீது வழக்குப்பதிவு
X

உத்திரமேரூர் அருகே நிகழ்ந்த கல்குவாரி விபத்து சம்பந்தமாக 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம் , மதூர் கிராமத்தில் தனியார் கல்குவாரியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். இருவர் காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து கல்குவாரி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இறந்த மணிகண்டனின் உறவினர் விஜய் என்பவர் அளித்த புகாரின் பேரில் விபத்து நடந்த தனியார் கல்குவாரி உரிமையாளர் சரத் மற்றும் குவாரி மேற்பார்வையாளர் சுரேஷ், குவாரி மேஸ்திரி உள்ளிட்ட 3 பேர் மீதும் சாலவாக்கம் காவல்துறையினர் மனித உயிருக்கு அபாயத்தை உண்டாக்கியது , மரணம் விளைவிக்கும் வகையில் குற்றம் புரிதல் என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி