அமமுக வெற்றி பெற 1008 தேங்காய் உடைப்பு

அமமுக வெற்றி பெற 1008 தேங்காய் உடைப்பு
X

வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெற ஆஞ்சநேயருக்கு 1008 தேங்காய் உடைத்து உத்திரமேரூர் வேட்பாளர் வேண்டுதல் மேற்கொண்டார்.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற அமமுக வேட்பாளராக முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அமமுக 2021 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற வேண்டி அப்பகுதி பெண்கள் 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் வேட்பாளர் தேங்காய் சுற்றி உடைத்து கும்பிட்டு பின்பு உத்திரமேரூர் தேர்தல் அலுவலர் பாபுவிடம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு அமமுக சார்பில் போட்டியிட வேட்புமனுவை அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!