பேருந்து கவிழ்ந்து விபத்து-10 பேர் காயம்

பேருந்து கவிழ்ந்து விபத்து-10 பேர் காயம்
X

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த நந்தாநல்லூர் தனியார் தொழிற்சாலை பேருந்து பெரும்பாக்கத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு காலை 5.45 மணி அளவில் கம்பெனிக்கு செல்லும் போது பின்னால் வந்த லாரி மோதியதில் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் நிசாந்தி , சேகர் நந்தினி , கௌசல்யா, வனஜா, சகிலா, ஹரிகரன், தட்சிணாமூர்த்தி , ஐயப்பன் உள்ளிட்ட 15 நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு வாலாஜாபாத் தனியார் மருந்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!