அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி இல்லை... பெண் ஊழியர்கள் அவதி..

அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி இல்லை... பெண் ஊழியர்கள் அவதி..
X
உத்திரமேரூர் பெண் ஊழியர்கள் கடும் குற்றச்சாட்டு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தற்போது இரு வார ஊரடங்கு அமலில் உள்ளது.

அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல அரசு பேருந்துகள் காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடு தாம்பரம் செங்கல்பட்டு என பல மார்க்கங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 6:00 மற்றும் 7 மணியளவில் சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரைக்கு திருப்பூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படுகிறது..

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியான உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , வேளாண் விற்பனை கிடங்கு , காவல்நிலையம் , தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இதில் நூற்றுக்கணக்கான அரசு ஆண் பெண் அலுவலர்கள் பணி புரிந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூர் செல்ல சிறப்பு பேருந்துகள் அரசு ஊழியர்களுக்காக இயக்கப்படவில்லை.

ஆண் அலுவலர்கள் இருசக்கர வாகனத்தில் பணிக்கும் செல்லும் நிலையில் பெண் அலுவலர்கள் அலுவலக வாகனங்களில் போதிய இடைவெளி இன்றி அமர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பெண் ஊழியர்களின் உறவினர்கள் அவர்களை அழைத்து சென்று அலுவலகத்தில் விட்டு மீண்டும் வீடு திரும்பி மீண்டும் மாலை உத்தரமேரூர் அலுவலகம் சென்று பணி முடித்ததும் ஊழியர்களை அழைத்து வர என பல அலை கழிப்புகளிடையே என் உயிரில் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே காஞ்சிபுரம் உத்திரமேரூர் மார்க்கெட்டில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல சிறப்புப் பேருந்து செயல்படுத்த பெண் ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Tags

Next Story