பறக்கும்படை சோதனை- ரூ. 11லட்சம் பறிமுதல்

பறக்கும்படை சோதனை- ரூ. 11லட்சம் பறிமுதல்
X

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆவணமின்றி எடுத்து சென்ற 11.40 லட்சம் மற்றும் பணம் சுமார் 706 கிராம் தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வகையில் இன்று மானாம்பதி கூட்டுச்சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது வந்தவாசியில் இருந்து பெருநகர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது மேற்படி நபர் எந்த ஆவணமும் இன்றி ரூ. 10,40,000 மற்றும் தங்க நகை சுமார் 706 கிராம் கொண்டு வந்ததை கைப்பற்றி உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்ட நபரின் பெயர் அரப்அலி எனவும் வந்தவாசியில் நகைகடை வைத்திருப்பதாகவும் மேற்கண்ட நகை மற்றும் பணத்தை கொண்டு சென்னையில் கடைக்கு நகை வாங்க சென்றதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!