காட்டில் பதுங்கியிருந்த வழிப்பறி திருடர்கள் கைது

காட்டில் பதுங்கியிருந்த வழிப்பறி திருடர்கள் கைது
X

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே காட்டில் பதுங்கியிருந்த வழிப்பறி திருடர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலாஜாபாத்தை அடுத்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் சில தினங்களுக்கு முன் சாலையை ஒட்டி மாலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக பைக்கில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பிரவீனை தலையில் வெட்டி சுமார் ஒன்றரை சவரன் தங்கசெயின், செல்போன், ரூ. 8000 ரொக்கப்பணம் ஆகியவற்றை பிடுங்கிக்கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் வாலாஜாபாத்தை அடுத்த உள்ளாவூர் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சில வாலிபர்கள் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்களை சுற்றிவளைத்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்டவர்கள் வந்தவாசி பகுதியை சேர்ந்த அசோக் குமார் (19), முருகன் (18) ,ரிஷிநத் (19) சந்தோஷ்குமார் (20), கணேஷ் (21) சரவணன் (21) என்பதும், அவர்கள் மீது திருவண்ணாமலை மாவட்ட சுற்று வட்டார காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் அனைவரும் தனியாக நிற்பவர்களை தாக்கி அவர்களிடமிருந்து பணம், நகை செல்போன், பைக் உள்ளிட்டவைகளை பறித்துக்கொண்டு தப்பிச் செல்வது இவர்களின் வாடிக்கை என தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடமிருந்து ஐந்து செல்போன்கள், ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு பைக்குகள் ஒன்றரை சவரன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இவர்கள் மீது வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி