மாணவிகள் திறமையை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள்

மாணவிகள் திறமையை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள்
X

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் அருகே மாணவ மாணவிகள் ஓவியம் வரைந்து அசத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத்தை அடுத்த அயிமஞ்சேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் படித்து வருகின்றனர்.கடந்த பத்து மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி இயங்காத நிலையில் மாணவ , மாணவிகள் தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பயிற்சி பெற்றதை வெளிக்கொணரும் வகையில் பள்ளி வளாகத்தில் உள்ள சுவர்களில் சுற்றுச்சுழல் ,கொரோனா விழிப்புணர்வு , நல்ல பழக்க வழக்கங்கள் ஆகிய செயல்களை தெரிந்து கொள்ளும் வகையில் வண்ண ஓவியங்களாக வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!