கோரிக்கைகள் நிறைவேறாததால் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள் நிறைவேறாததால் சங்கு ஊதி  ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேறாததால் சங்கு ஊதி கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் அயிமஞ்சேரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை .மேலும் வாலாஜாபாத் – சுங்குவார்சத்திரம் ஆறு வழி சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர குடியிருப்புகளை காலி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர்களுக்கு போதிய இழப்பீடு தற்போது வரை வழங்கப்படவில்லை. மேலும் பல நபர்களுக்கு பல ஆண்டுகளாக பத்திரத்தை அடங்கலில் ஏற்றி பட்டா வழங்கமால் தாழ்த்தி வருவதாக தெரிகிறது.

இது குறித்து பல நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காத வருவாய் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என 50க்கும் மேற்பட்டோர் சங்கு ஊதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai solutions for small business