தெளிவான முடிவுக்கு காத்திருக்கிறோம்- பிரேமலதா

தெளிவான முடிவுக்கு காத்திருக்கிறோம்- பிரேமலதா
X

களத்திற்கு வரும் பொழுது தெளிவான ஒரு முடிவோடு வர வேண்டுமென காத்திருக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் , உத்திரமேரூர் , மதுராந்தகம் (தனி) தொகுதி செயல்வீரர்கள் மற்றும் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் உத்திரமேரூரில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசும் போது, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா , பெட்ரோல் டீசல் விலை உயர்வதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. மத்திய மாநில அரசுகளிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த நிச்சயம் வலியுறுத்துவோம். தமிழகத்தில் நடைபெற்ற எத்தனையோ தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு உள்ளது. எனவே களத்திற்கு வரும் பொழுது தெளிவான ஒரு முடிவோடு வர வேண்டுமென காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story