விஷபூச்சி நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

விஷபூச்சி நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தர்பூசணியை தாக்கும் விஷபூச்சி நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூரை அடுத்த ஆதவப்பாக்கம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டுள்ளனர்.இங்கு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஆண்டுதோறும் மொத்தமாக தர்பூசணியை வாங்கி செல்வதால் தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் போதிய வருமானம் ஈட்டி வந்தனர்.இந்நிலையில் தர்பூசணி செடியின் வேரில் கடந்த இரு வாரங்களாக பூச்சி நோய் தாக்குதல் காரணமாக காய் வரும் நிலையில் செடிகள் அழுகி வீணாவதும், மேலும் செடிகள் நன்றாக வளர்ந்து இருந்தும் செடிகளில் காய்கள் காய்க்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பல ஏக்கரில் தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்த வருமானம் கூட கிடைக்காமல் வேதனை அடைந்துள்ளனர். இதனால் தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலங்களில் வேளாண்மைதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூச்சி நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!