புல்வாமா தாக்குதல் -நினைவஞ்சலி செலுத்திய இளைஞர்கள்

புல்வாமா தாக்குதல் -நினைவஞ்சலி செலுத்திய இளைஞர்கள்
X

காஞ்சிபுரத்தில் புல்வாமா தாக்குதலின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2019 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்ட அவந்தி போரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் மத்திய சேமக் காவல்படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது தற்கொலை தீவிரவாதி ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் ஏற்படுத்தியதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூரை அடுத்த மணல்மேடு , புலிவாய் கன்னிகுளம் கிராமத்தை சேர்ந்த 50 கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் மணல்மேடு கூட்டு சாலையில் அவர்களது புகைப்படங்களை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர் .இந்நிகழ்வில் பேசிய காவலர் ஒருவர் , ராணுவ வீரர்களின் சேவை அளப்பரியது எனவும் , இளைஞர்கள் சரியான பாதையில் பயணித்து நாட்டிற்கும் , பெற்றோருக்கும் நற்பெயரை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!