கல்குவாரிகளால் சுவாச கோளாறு - பொதுமக்கள் மறியல்

கல்குவாரிகளால் சுவாச கோளாறு - பொதுமக்கள் மறியல்
X

கல்குவாரிகளால் சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தின் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தை ஒட்டியுள்ள சுருட்டல் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் எம்.சாண்ட் இயங்கி வருகிறது. கல்குவாரி பயன்பாட்டிற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் 24 மணி நேரமும் இயங்கி வருவதால் லாரிகளில் ஏற்றி செல்லப்படும் எம்சாண்ட் துகள்கள் மற்றும் வீடுகளில் சமையல் அறை வரை பரவி வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக கூறி கூட்டு சாலை அருகே கல்குவாரி செல்லும் லாரியை வழிமறித்து குவாரிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து கல்குவாரியிடம் பேசுவதாகவும் இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல அரசு அதிகாரிகளுடன் பேசி சுமூகமாக பிரச்சனை தீர்க்கப்படும் என கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!