உத்திரமேரூர் பேரூராட்சி திமுக வசமானது

உத்திரமேரூர் பேரூராட்சி திமுக வசமானது
X
உத்தரமேரூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 18 இடங்களில் 14 ல் வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றி உள்ளது.

குடவோலை முறை தேர்தலை உலகிற்கு அறிமுகம் செய்த உத்தரமேரூர் பேரூராட்சிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் திமுக 14 இடங்களிலும் , அதிமுக மூன்று இடங்களிலும் , பாமக ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் உத்திரமேரூர் பேரூராட்சி திமுக தன்வசம் ஆக்கிக் கொண்டுள்ளது.

முதல் வார்டில் அறிவழகன் , இரண்டாவது வார்டு வெங்கடேசன், 3வது வார்டில் நரசிம்மபாரதி, 6வது வார்டில் தமிழரசி , 8வது வார்டில் இளமதி, 9வது வார்டில் தனசேகரன், பத்தாவது வார்டில் சிங்காரி, 13 வது வார்டில் கவிதா சசிகுமார், 12 வது வார்டில் மைவிழிசெல்வி, 13 வது வார்டில் உதயசூரியன் , 14வது வார்டில் பரணி , 15வது வார்டில் சசிகுமார் , 17வார்டில் குணசேகர், 18வது வார்டில் ரத்தனா ஆகியோர் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்

இதேபோல் நான்காவது வார்டில் பத்மாவதி , 5 வது வார்டில் பாரதி , 16 வது வார்டில் தீபா ஆகியோர் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக 7வது வார்டில் உமா வெற்றி பெற்றுள்ளார்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!