லிப்ட் அளிப்பதாக கூறி பெண்களிடம் சில்மிஷம் வழிப்பறி‌ செய்த வாலிபர் கைது.

லிப்ட் அளிப்பதாக கூறி பெண்களிடம் சில்மிஷம்  வழிப்பறி‌ செய்த  வாலிபர் கைது.
X

லிஃப்ட் தருவதாக கூறி பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு கைதான கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சதாம் உசேன்

ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபாத் பகுதிகளில் தனியே நடந்து செல்லும் பெண்களுக்கு லிப்ட் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே குண்ணவாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அந்தப் பெண் வேலைக்கு செல்வதற்காக கடந்த பத்தாம் தேதி குண்ணவாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் காரை நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்று சென்று கத்தியை காட்டி பாலியல் வன்புணர்வு செய்து, நான்கு கிராம் மதிப்பிலான தங்க நகைகளை பறித்துக் கொண்டு பண்ருட்டி கண்டிகை கிராமம் அருகே பெண்ணை இறக்கி விட்டு விட்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேபோல வாலாஜா பாத் அருகே ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் இதேபோன்று புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில் தனி படை அமைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது கூடுவாஞ்சேரி அருகே உள்ள வள்ளலார் நகர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்த 29 வயதான சதாம் உசேன் என தெரியவந்ததை அடுத்து போலீசார் விரைந்து சென்று சதாம் உசேனை கைது செய்து அவர் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் சதாம் உசைனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சாலைகளில் தனியாக செல்லும் பெண்களிடம் லிப்ட் தருவதாக கூறி காரில் ஏற்றி தன்னிடம் வைத்திருந்த கத்தி மற்றும் மயக்கம் தரக்கூடிய ஸ்ப்ரேயரை காட்டி மிரட்டி பாலியல் வனப்புணர்வு செய்து நகைகளை பறித்துக் கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு செல்வதை வாடிக்கையாக செய்து வந்தது தெரிய வந்தது.

இரண்டு பெண்கள் மட்டுமே புகார் அளித்துள்ளதால் சதாம் உசேன் இது போன்று எத்தனை பேரை ஏமாற்றியுள்ளான் என்ற தகவல் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக முன்வந்து புகார் அளித்தால் மட்டுமே சதாம் உசேனால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன் பின் தெரியாத ஆட்களுடன் பேசுவதும் அவர்கள் வாகனத்தில் செல்வதும் தவிர்க்க வேண்டும் என பலமுறை பெண்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை கவனத்தில் கொள்ளாததே இது போன்ற சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் ஒரகடம் போலீசார் சதாம் உசேன் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!