/* */

குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரத்தில் மீட்பு, தப்பியோடிய ராணுவ வீரரை போலீஸ் தேடுது

குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர், தப்பியோடிய ராணுவ வீரரை போலீஸ் தேடிவருகிறது.

HIGHLIGHTS

குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரத்தில் மீட்பு, தப்பியோடிய ராணுவ வீரரை போலீஸ் தேடுது
X

காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்ட குஜராத் இளைஞர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த செபஸ்டின் ராஜ் என்பவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவர் குஜராத்தை சேர்ந்த ஷகீல் என்பவரிடம் தங்க முதலீட்டில் ரூபாய் 20 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதலீடு பணத்தை ஷகிலிடம் கேட்டும் பல்வேறு காரணங்களை கூறி அலை கழித்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்களான ஜான்ஆரோக்கியசாமி, ஜான்சன் மற்றும் முகமது பட்டாணி ஆகியோரை அழைத்துக்கொண்டு குஜராத் சென்று ஷகிலுக்கு போன் செய்து அழைத்துள்ளார்.

ஷகில் தனது ஊழியரான லால்கிஹீஜியா என்பவரை அனுப்பியுள்ளார். இவரை செபாஸ்டின் ராஜ் குழுவினர் கடத்தி காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகிலுள்ள தனியார் ஓட்டலில் இரு அறைகள் எடுத்து தங்கி வந்துள்ளனர்.

கடத்தல் சம்பந்தமாக குஜராத் காவல்துறையின் சென்னை சைபர்கிரைம் உதவியுடன் இவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களுக்கு உதவ‌ காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் அப்பகுதியை காவல்துறையினர் கண்காணிக்கப்பட்ட போது ஜான்சன் தப்பியோடியுள்ளார்.

இவரை பிடித்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது குஜராத் வாலிபரை காரில் வேலூர் மார்க்கமாக கடத்தி செல்லவதாக கூறியுள்ளார்

காவல் கட்டுபாட்டு அறை மூலம் மாவட்ட எல்லையில் காரின் பதிவு எண் கொண்டு நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரிலிருந்து செபஸ்ன்டிராஜ், முகமது பட்டாணி என்ற இருவர் தப்பியோட ஜான்ஆரோக்கியசாமி மற்றும் கடத்தப்பட்ட வாலிபரை மீட்டு சுங்குவார்சத்திர காவல்நிலையத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 16 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!