ஸ்ரீபெரும்புதூர் : 5 மாத இளம் கர்ப்பிணி பெண் சந்தேக மரணம் - ஆர்.டி.ஓ. விசாரணை

ஸ்ரீபெரும்புதூர் : 5 மாத இளம் கர்ப்பிணி பெண் சந்தேக மரணம் - ஆர்.டி.ஓ. விசாரணை
X
ஸ்ரீபெரும்புதூரில் ஐந்து மாத கர்ப்பிணி இளம்பெண் சந்தேக மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து உறவினரிடம் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் பகுதியை சேர்ந்தவர் (லேட்) பழனி என்பவர் மகள் சங்கீதா. இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும்போது அதே வகுப்பில் படித்த செய்யாறு பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடைய மகன் அருண்குமார் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சங்கீதா உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்றபோது அவர் 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி 2மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்து ஸ்ரீபெரும்புதூர் தனியாக தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் அருண் குமாருக்கு அருகிலுள்ள சிப்காட்டில் வேலை கிடைத்ததால் வேலைக்கு சென்று விடுவதால் சங்கீதாவின் பாட்டி அவருக்கு துணையாக அங்கு செல்வது வழக்கம். இன்று வழக்கம்போல் சங்கீதாவின் பாட்டி வீட்டுக்கு சென்றபோது சங்கீதா வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சங்கீதா ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிய வந்தது.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் அரசு மருத்துவமனையில் பிரேதத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சங்கீதா மரணம் குறித்து அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சங்கீதா 5 மாத கர்ப்பிணியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி