/* */

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பெரும்புதூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 245 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

மக்கள் தொடர்பு  முகாமில் ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கோட்டூர் பகுதியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கூட்டுறவுத் துறை  சாரபில் கடன் உதவி மகளிர் சுய உதவிக்கு நல திட்டம் வழங்கிய ஆட்சியர் ஆர்த்தி.

திருப்பெரும்புதூர் வட்டம், கோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 245 பயனாளிகளுக்கு ரூ.3,47,01,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி வழங்கினார்.

பொது மக்களிடம் நல திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியர் ஆர்த்தி பேசியதாவது: நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.

இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டு உள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.

இன்று மனு நீதி நாள் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, 28.03.2023 முதல் 10.04.2023 வரை வருவாய் கோட்டாட்சியர் முகாமிட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. அதனை முறையாக பரிசீலித்து, பெறப்பட்ட மனுக்களில் மாற்றுத் திறனாளி நலத்துறை மூலம் திறன்பேசி 2 நபர்களுக்கும், வருவாய் துறை மூலம் அடிப்படை தேவைகளான இலவச வீட்டுமனைப் பட்டா 126 நபர்களுக்கும், முதியோர் உதவித் தொகை 44 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 29 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி துறை மூலம் மகளிர் சுய உதவிக் குழு வங்கி கடன் 9 நபர்களுக்கும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2 குழந்தைகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம் 2 நபர்களுக்கும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் விலையில்லா சலவைப்பெட்டி 6 நபர்களுக்கும், மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் கடன் 2 நபர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வேளாண் இடுப்பொருட்கள் 4 நபர்களுக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் நாற்றுகள், விதைகள் வழங்குதல் 4 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவி வங்கிக் கடன் 4 நபர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டம் 11 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, கூட்டுறவுத் துறை இணை இயக்குனர் ஜெய்ஸ்ரீ உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 April 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!