நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
X

செம்பரம்பாக்கம் ஏரி

காலை 6 மணிக்கு 100 கன அடி நீர் வெளியேறிய நிலையில், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

தமிழக வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான 'மாண்டஸ்' புயல் கரையை கடந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 61 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 22 மில்லி மீட்டர், உத்தரமேரூர் ஐந்து மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 19 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 36 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இது மட்டுமின்றி, திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், தற்போது 22.25 அடி நீர் உள்ளது

ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த சில தினங்களாக 100 கன அடி நீர் வெளியேறி வந்த நிலையில், இன்று காலை 9 மணி முதல் நீர்வரத்து அதிகம் காரணமாக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2046 கன அடியாக உள்ளது. தொடர்ந்து சுற்று பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் காலை 12 மணி அளவில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 2000 கன அடி நீர் வெளியேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறியிருந்தார்.

செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து ஆன திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலிருந்து தொடர்ந்து நீர் அதிகரித்து வருவதால் மாலை 4. அளவில் இருந்து மூவாயிரம் கன அடி நீர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படும் என தற்போது அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உபரி நீர் அதிகமாக வெளியேறுவதால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது இது பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆனாலும். மாவட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை பேரிடர் துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது பாதுகாப்பு கருதி உபரிநீரை வெளியேற்றுவதும், இதுகுறித்து அறிவிப்புகளை முறையாக வெளியிடுவதும் ஒரு வகையில் பொதுமக்களுக்கு அச்சத்தை போக்குகிறது.

இந்நிலையில் மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?