ஸ்ரீபெரும்புதூர் : தனியார் தொழிற்சாலை சுவர் இடிந்து வடமாநில தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதூர் : தனியார் தொழிற்சாலை சுவர் இடிந்து வடமாநில தொழிலாளி பலி
X

காஞ்சிபுரம் அருகே இடிந்து விழுந்த சுற்றச் சுவர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியில் தங்கி பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் மண்டல்(46) இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கும்போது அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தரமற்ற வகையில் கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விஜய் மண்டல் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே விஜய் மண்டல் பலியானார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!