கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் பாபு. இவர் தன்னுடைய தனிப்பட்ட முறையில் அலுவலக உதவியாளர் சுரேஷ் என்பவரை நியமித்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டு மனைக்கு தடையில்லா சான்று வழங்க கிராம நிர்வாக அலுவலரை அணுகியபோது சுரேஷிடம் பேசுமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் சுரேஷிடம் பேசுகையில், பரிந்துரை செய்ய ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார் மேலும் அதனை கூகுள் பேயில் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ரூபாய் 15 ஆயிரத்தை சுரேஷின் கூகுள் பேயில் அனுப்பி விட்டு அந்த ஆவணத்தை சென்னை 2 லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு புகாராக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் டி.எஸ்.பி.லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் அவரின் தனி உதவியாளர் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சியில் லஞ்சம் எவ்வகையில் பெற்றாலும் அதனுடைய ஆவணங்கள் சிக்கும் என்பதை அறியாமல் சிக்கிக்கொண்ட கிராம நிர்வாக அதிகாரி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu