காஞ்சிபுரம் மாவட்டத்தில் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது
ஸ்ரீபெரும்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த சாந்தி சதீஷ்குமார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்துரத்தினவேல், செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட வள்ளலார் முப்பெரும் விழா இன்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்று நிறைவடைந்தது.
திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 1823ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூர் என்று கிராமத்தில் பிறந்தார். பள்ளிக்கு செல்லாமலே எனது 9 வயதிலேயே கவி பாடும் திறனை பெற்றார். 1865ல் சமய சன்மார்க்க சங்கத்தை நிறுவி மக்களின் பசியை போக்குவதற்காக வடலூரில் 1867 ஆம் ஆண்டு முதல் தனது தரும சாலையை தொடங்கினார். 51 வருடங்கள் வாழ்ந்த நிலையில் 1874ம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் சித்தி அடைந்தார்.
வள்ளலாரின் 200வது ஆண்டு விழா, தருமசாலை 156வது ஆண்டு விழா, 152ஆம் ஆண்டு ஜோதி தரிசன விழா என முப்பெரும் விழாவாக இந்து சமய அறநிலைய துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அந்த அறிவிப்பின்படி காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை மண்டலத்தின் சார்பில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் இந்த முப்பெரும் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடக்க விழா கடந்த 13ம் தேதி காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து 16ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முப்பெரும் விழாவை தொடங்கி வைத்தனர்.
இதன்பின் வள்ளலார் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இதன்பின் சமய சன்மார்க்க சங்க உறுப்பினர்களால் ஜோதி தீபம் காட்டப்பட்டு அனைவரும் கண்டு தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத், அதன் மறுநாள் உத்திரமேரிலும் அதனைத் தொடர்ந்து மாங்காடு குன்றத்தூர் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார் , ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி , காஞ்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் முத்துரத்தினவேல், செயல் அலுவலர் முத்துலட்சுமி , திமுக ஒன்றிய செயலாளர் கோபால் , மாவட்ட கவுன்சிலர் குன்னம் ராமமூர்த்தி , குன்னம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வள்ளலார் சங்கத்தினர் சார்பில் ஜோதி காண்பிக்கப்பட்டு 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட அன்னதான விழாவினை தொடங்கி வைத்து அனைவரும் அவர்களுடன் அறுசுவை உணவு அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் திருக்கோயில் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu