ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்
X
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என கு.செல்வபெருந்தகை கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் 200 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டு ஆக்ஸிஜன் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

தற்போது உள்ள கொரோனா பாதிப்பில் ஆக்ஸிஜன் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் இத்தொழிற்சாலையின் செயல்பாடுகள், வினியோகம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இரு தொழிற்சாலைகளில் ஓன்று இலக்கை தாண்டி உற்பத்தி செய்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் இந்த இரு தொழிற்சாலைக்கு அளிக்கப்படும் மின்சாரம் சில நேரங்களில் தடைபடுவதாகவும் ஆய்வில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, உடனடியாக இந்த இரு நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் ஓரு தொழிற்சாலையில் விநியோகத்தில் முறைகேடு உள்ளதாகவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story