டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு முதன்மைக் குற்றவாளி உமேஷ்குமார் சிறையிலைடைப்பு .
போலீஸாரால் கைதுசெயப்பட்ட உமேஷ்குமார்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
பணிக்கு வரும்போது வடமாநில இளைஞர்கள் இருவர் இவரிடம் வழி கேட்பது போல் அவரிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.இந்திராணியின் அலறல் சப்தம் கேட்டு பொதுமக்கள் வழிப்பறிக் கொள்ளையர்களை துரத்தியபோது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், பொதுமக்கள் பயந்து ஒதுங்கினர்.இதையடுத்து பென்னலூர் ஏரிப் பகுதியில் இருவரும் தலைமறைவாகினர்.
இது குறித்து பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தெரிவித்தன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து மேவலூர்குப்பம் பகுதியில் காட்டு பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்தபோது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட முயன்றனர். அப்போது போலீஸார் என்கவுண்டர் செய்ததில் ஒரு நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
அந்நபர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தாஷா என்பதும் தெரியவந்தது.. இவனுடன் பதுங்கியிருந்த அத்தர் என்பவரையும் காவல்துறையினர் விசாரித்தபோது, மேலும் இருவர் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் அனைவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் பீகார் மாநிலம் அவங்கரா பகுதியில் பதுங்கியிருந்த முதன்மைக் குற்றவாளியான உமேஷ் குமாரை நேற்று கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். .இன்னும் ஒரு குற்றவாளி அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்..போலீஸார் கைது செய்யப்பட்ட உமேஷ் குமார் என்பவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu