ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா அரிசியை குடும்ப அட்டைகள் மூலம் மாதந்தோறும் இலவசமாக வழங்கி வருகிறது. சிலர் இதனை முறையாக பெறுவதில்லை என்பதும் சிலர் இதனை நியாய விலை கடைகளில் இருந்து பெற்று , வட மாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பதும், சென்னை புறநகர் பகுதிகளில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மொத்தமாகவும் மினி வேன் ரயில் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தும் அதனைத் தொடர்ந்து குடிமை பொருள் புலனாய்வு துறை அவ்வப்போது வேலூர் காட்பாடி மற்றும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் டன் கணக்கில் ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு சென்னை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் தீவிரமாக கண்காணித்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வழியாக ஒரகடம் நோக்கி வந்த மினி லோடு வேன் போலீசாரை கண்டு நிற்காமல் சென்றது.பின்னர் நிற்காமல் சென்ற மினி லோடு வேனை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

இதில் 60 மூட்டைகளில் சுமார் 3000 கிலோ ரேஷன் அரிசியை சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து ஸ்ரீபெரும்புதூர்,ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி செல்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

பின்னர் மினி லோடு வேனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் ஒளி முகமது பேட்டை பகுதியை சேர்ந்த அசேன்ரசாக் (36), சாகுல் ஹமீது (27) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Tags

Next Story
ai based agriculture in india