ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. நல திட்ட உதவி வழங்கும் விழாவில் தள்ளு முள்ளு

ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. நல திட்ட உதவி வழங்கும் விழாவில் தள்ளு முள்ளு
X

ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. சார்பில் நடந்த  நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

.ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. நல திட்ட உதவி வழங்கும் விழாவில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பானது.

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் உயிரை பணயம் வைத்து பொருட்களை அள்ளி சென்ற பொதுமக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , திருப்பெரும்புதூர் தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு பெரும் தலைவரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி மற்றும் பேரூராட்சி செயலாளர் சதீஷ்குமார் ஆகியார் வரவேற்புரை ஆற்றிட , ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் இக்கூட்டம் நடைபெற்றது. சென்னை அரங்கநாதன் , சைதை சாதிக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்,

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க.செயலாளரும், தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தென்னங்கன்று , 25 கிலோ அரிசி, பாத்திரங்கள், தலைக்கவசம், சைக்கிள், ஆட்டோ ஓட்டுனருக்கு சீருடை, ஏழை எளிய மக்களுக்கு புடவை , விளையாட்டு குழுக்களுக்கு வாலிபால், கேரம்போர்டு ,ஃபுட்பால் -என 1800 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு பெருந்தலைவர் படப்பை மனோகரன், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள் ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் மாணவரணி மகளிர் அணி இளைஞரணி பொதுமக்கள் என ஐந்ததாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வரிசைப்படுத்தி வழங்காததால் அவரவர் விருப்பம் போல் தென்னங்கன்றுகளை விழுந்தடித்துக்கொண்டு அள்ளிச் சென்றனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறுபுறம் பாத்திரங்கள் பறந்து சென்றன. நிறைவாக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ப.இராமமூர்த்தி நன்றி உரை தெரிவித்தார்.

Tags

Next Story