வணிகர்கள் உரிய காலக்கெடுவில் ஆக்கிரமிப்பை அகற்ற விழிப்புணர்வு

வணிகர்கள் உரிய காலக்கெடுவில் ஆக்கிரமிப்பை அகற்ற விழிப்புணர்வு

சுங்குவார்சத்திரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை வணிகர்கள் அகற்றி கொள்ள  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட வணிகர் சங்க நிர்வாகிகள்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்பு இடங்களை வணிகர்கள் அகற்றிக்கொள்ளுமாறு வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பண்ணாட்டு தொழிற்சாலை, பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள், சிப்காட் வளாகங்களில் இயங்குகின்றது. இதில் பணி புரிபவர்களை நாள்தோறும் அழைத்துச் செல்ல பேருந்து வசதிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த பேருந்துகள் பணி முடிந்து திரும்பும் நிலையிலும் பணிக்கு வரும் நிலையிலும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது திடீர் திடீரென ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

மேலும் பேருந்துகள் நகரின் உள் வருகையில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து வருவதாலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்துவது பெருத்த சிரமம் ஏற்படுவதால் நெரிசல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை காவல்துறை என பல தரப்பினரும் இதனை அவ்வப்போது அகற்றி வருவதும், சாலை விரிவாக்க பணி உள்ளிட்டவைகள் என மாறி மாறி காஞ்சிபுரத்தில் துவங்கி அனைத்து பகுதிகளையும் இந்த நெரிசல் காணப்படுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் அதன் ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மற்றும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் வரும் பேருந்துகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் தினசரி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

மேலும் சுங்குவார் சத்திரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலை, திருவள்ளூர் செல்லும் சாலைகளில் இருபுறங்களிலும் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.இதனை இப்பகுதி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனை கண்டிக்கும் வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் மொளச்சூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை வரும் 25 ஆம் தேதிக்குள் அகற்றுமாறும் மீறினால் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று நோட்டீஸ் அச்சடித்துள்ளனர்.

அதனை சுங்குவார்சத்திரம் மொளச்சூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வியாபாரிகள் சங்கத்தினர் விநியோகம் செய்தனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க வியாபாரிகள் சங்கத்தினர் கையில் எடுத்துள்ள முயற்சி பொதுமக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story