கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 42 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது

கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 42 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
X

திருபெரும்புதூரில் டாஸ்மாக் கடை அடைத்தவுடன் கள்ளத்தனமாக மது  விற்பனை செய்வதற்காக மதுவை பதுக்கி வைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 42 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை காவல்துறை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மதுபானக் கடைகள் இல்லாத நேரத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் கிராமங்கள் தோறும் அளிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகருக்கு தொடர் புகார்கள் வந்தது.

இதனை அடுத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கிராமங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீவளூர், வடமங்கலம், கீழபொடாவூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் ரூபாய் 42 ஆயிரம் மதிப்பிலான 347 மதுபாட்டில்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு என்பவர் மகன் மணிகண்டன் , வடமங்கலத்தை சேர்ந்த சின்னபையன் மகன்‌ மணிகண்டன் , கீழ்பொடாவூர் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் கண்ணபிரான் ஆகியோரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அரசு மதுபானங்களை கள்ளத்தனமாக விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare