குன்றத்தூரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மூன்று அமைச்சர்கள் ஆய்வு

குன்றத்தூரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மூன்று அமைச்சர்கள் ஆய்வு
X

குன்றத்தூர் வட்டத்தில் தேங்கியுள்ள மழை நீர் பகுதிகளை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.                      

 ஆர்த்தி

குன்றத்தூரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அமைச்சர்கள் நேரு , அன்பரன் நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் கொளப்பாக்கம், பரணிபுத்தூர், மாங்காடு பகுதியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் , பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் இன்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்த காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளப்பாக்கம், பரணிபுத்தூர் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள தாழ்வான ஒருசில தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த மழைநீரினை அகற்ற உயர் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் டிராக்டர் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்பு துரிதமாக தேங்கியுள்ள நீரினை வெளியேற்றவும், பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்களின் மூலம் சிகிச்சை அளிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

பின்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறியதாவது:-

தேங்கியுள்ள நீரானது மழைநீர் வடிகால் மூலம் அடையாறு சென்றடைகிறது. இந்தக் வடிகால் கொள்ளளவு குறைவாக இருப்பதால் அதிக நீர் வெளியேறுவது தாமதம் ஆகிறது. எனவே அதிகப்படியான நீர் கொளப்பாக்கம், பரணிபுத்தூர் மற்றும் மாங்காடு குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கியுள்ளது.

இந்த உபரிநீரினை அகற்ற உயர் குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் டிராக்டர் பொருத்தப்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.ஆகவே துரிதமாக மழைநீர் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தேவைபடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர்.இல.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதலில் மழைப்பொழிவு பல்வேறு பகுதிகளில் இல்லை என்பதால் நீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் அலுவலர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தாழ்வழுத்த மண்டலம் உருவாகும் மேலும் இரு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீண்டும் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே உள்ளனர்.

மீண்டும் மழை மிரட்டினாலும் நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare products