தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
X

பைல் படம்

தொழிற்சாலைக்கு கட்டுமான பணிக்கான பொருட்களை சப்ளை செய்யும் வாய்ப்பு கேட்டு, மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , வல்லம்-வடகால் சிப்காட் பகுதியில் புதிய தொழிற்சாலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இத்தொழிற்சாலை கட்டுமானப் பொருட்களை பால்நல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் நியமிக்கப் பட்டு சப்ளை செய்து வருகிறார்.

இந்நிலையில் இதே பால்நல்லூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் மணிமாறன் மற்றும் ஜெகநாதன் ஆகிய மூவர் தொழிற்சாலைக்கு சென்று தங்களுக்கு கட்டுமான பொருட்கள் சப்ளை செய்ய பணி வழங்கவேண்டும் என கூறி ஒப்பந்ததாரர் மிரட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மேற்கண்ட மூவரை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!