ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி நம்மை நம்பி வந்திருக்கிறார்கள் - ஆட்சியர் ஆர்த்தி

ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி நம்மை நம்பி வந்திருக்கிறார்கள் -  ஆட்சியர் ஆர்த்தி
X

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் இடையே பேசிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் எஸ்.பி. சுதாகர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, எஸ்பி கலந்துரையாடல் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த மூன்று நாட்களாகவே தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் எஸ்பி சுதாகர் ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

அவ்வகையில் மூன்றாவது நாளில் , ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு திடலில் வடமாநில தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட மாநில தொழிலாளர்கள், வட மாநில தொழிலாளர்கள் பணி புரியும் தொழிற்சாலையின் மேலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் ஊராட்சியில் உள்ள தலைவர்கள் என நூற்றுக்கானக்காணோர் பங்கு பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு வடமாநில தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவன மேலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வடமாநில ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினர்.

அப்பொழுது பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி நம்மளை நம்பி வந்திருக்கிறார்கள். அவ்ளோ கஷ்டப்பட்டு வரணுமா? அவர்கள் ஒன்னும் பெரிய வேலை செய்யணும்னு வரல. தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பனும்னு ஒரு எண்ணத்தில் தான் வராங்க. அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.

நீங்க அவங்க கிட்ட இருந்து வேலை வாங்குறீங்க , அதோடு நின்றுவிடாமல் அவர்களுடைய நலனிலும் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும் இதுதான் எங்களுடைய வேண்டுகோள் என உருக்கமாக கூறினார்.

இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி சுதாகர் , அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்து ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளும் வகையில் காவல்துறையின் தொலைபேசி எண்களை தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகையில் ஊராட்சி மற்றும் தொழிற்சாலை வகுப்புகளில் வைக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சி காவல்துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story