தாய், தந்தை முன்னே குழந்தையின் உயிரை பறித்த லாரி: தப்பியோடிய ஓட்டுநர்

தாய், தந்தை முன்னே குழந்தையின் உயிரை பறித்த லாரி: தப்பியோடிய ஓட்டுநர்
X

குழந்தை உயிரிழப்புக்கு காரணமான டிப்பர் லாரி.

தாய் தந்தை முன்னே, சாலை விபத்தில் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டை சேர்ந்தவர் மதன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி ரம்யா, மூன்று வயது மகள் பிரதிஷா உள்ளனர்.

இன்று தீபாவளி பண்டிகையை தனது தாய் வீட்டில் கொண்டாடுவதற்காக எருமையூரில் உள்ள ரம்யாவின் தாயார் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் மூவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எருமையூர், கன்னியம்மன் கோவில் அருகில் டாரஸ் லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் முன்னால் அமர்ந்திருந்த குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பிரதிஷாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தீபாவளியை கொண்டாட சென்ற போது தாய் தந்தை கண் முன்னே 3 வயது குழந்தை சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு