டாட்டா ஏஸ் வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து : வாலிபர் பலி

டாட்டா ஏஸ் வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து : வாலிபர் பலி
X
மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான வாகனம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே டாட்டா ஏசி வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார் .

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு சாலையில் பண்ருட்டி செல்வதற்காக டாட்டா ஏஸ் வாகனத்தில் ஓட்டுநர் வெற்றி மற்றும் ஜெயக்குமார் , ஈஸ்வரன் ஆகியோர் முன்பகுதியிலும், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த மதன்குமார் என்ற வாலிபர் பின்னால் அமர்ந்தும் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஓட்டுநர் வெற்றியின் கட்டுப்பாட்டை மீறி டாட்டா ஏஸ் வாகனம் திடீரென சாலையோரம் உள்ள மின்சாரக் கம்பத்தில் மோதி தலை கீழாக கவிழ்ந்து.

இதில் கம்பம் உடைந்து மின்சார கம்பி கீழே அறுந்து டாட்டா ஏசி வாகனம் மீது விழுந்தது. இதில் பின்னால் அமர்ந்திருந்த விக்ரவாண்டியை சேர்ந்த மதன் குமார் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

மேலும் முன்னால் அமர்ந்து வந்த 3 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதிவேகத்தில் வந்த டாட்டா ஏசி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதி மின்சார கம்பம் உடைந்து விபத்துக்குள்ளாகி மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!